மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்து 18,326 புள்ளிகளில் முடிவடைந்தது.
துவக்க வர்த்தகத்திலேயே 170 புள்ளிகள் வரை உயர்வாக இருந்தது சென்செக்ஸ் அதன் பிறகு சரிவு கண்டு உயர்வு புள்ளிகள் 77 ஆகக் குறைந்தது. ஆனால் மீண்டும் உயர்வுப்பாஅதையில் பயணிக்கத் தொடங்கியது.
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 5,486 புள்ளிகளில் முடிவடைந்தது
எல் அன் டி, சிப்லா, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு ஏற்பட்டது.
ஐடிசி, பாரத ஸ்டேட் வங்கி, ஒஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சற்று சரிவு ஏற்பட்டது.