இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 77.74 புள்ளிகள் சரிந்து 18,453.54 புள்ளிகளாக காணப்படுகிறது.
இதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 58.60 புள்ளிகள் குறைந்து 5,544.75 புள்ளிகளாக உள்ளது.
இதற்கு முன்னால் ஆரம்பித்துள்ள ஆசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்படுகிறது.
இதற்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முடிந்த அமெரிக்க பங்குச் சந்தைகளும் சரிவுடன் முடிந்திருக்கிறது.
நவஜோன்ஸ் 100 புள்ளிகள் குறைந்து 12,596 புள்ளிகளுடனும், நாஸ்ஷாக் 34 புள்ளிகள் சரிந்து 2,828 புள்ளிகளுடன் முடிந்திருக்கிறது.
இன்று காலை நேர வர்த்தகப்படி இந்திய ரூபாயின் மதிப்பு 45 ரூபாய் 7 பைசாவாக காணப்படுகிறது.