மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு இன்று துவக்கத்தில் 117 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி பிறகு ஏறுவதும், சரிவதுமாக இருந்து கடைசியில் 24 புள்ளிகள் சரிவுடன் முடிவுற்றது.
வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 24 புள்ளிகள் சரிந்து 19,420 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசியப் பங்குச்சந்தையின் நிப்டி குறியீடும் இன்றைய வர்த்தக முடிவில் 7 புள்ளிகள் சரிந்து 5,826 புள்ளிகளில் முடிவடைந்தது.
என்டிபிசி, இன்ஃபோசிஸ், டாடா பவர், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், பெல், டிஎல்எப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.