மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 68.50 புள்ளிகள் உயர்ந்து 17,700 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 5,303 புள்ளிகளில் முடிவடைந்தது.
இன்று காலை சென்செக்ஸ் துவக்கத்தில் 17,000 புள்ளிகளாகச் சரிந்தது. அதன் பிறகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, பாரத ஸ்டேட் வங்கி, ஜின்டால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் இன்ட்ஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்ஸி வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.