மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 117.83 புள்ளிகள் சரிந்து 18,178.33 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.
தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 31.85 புள்ளிகள் சரிந்து 5437 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை சிறிதளவு உயர்வுடன் துவக்கம் கண்ட பங்குச் சந்தையில் பிற்பாடு கச்சா எண்ணெய் விலை மற்றும் வட்டி விகித உயர்வு அச்சங்களால் வர்த்தகம் பின்னடைவு கண்டது.
இன்றைய சரிவில் வங்கித்துறை பங்குக் குறியீடு 1.75% சரிவடைந்து 12,096.34புள்ளிகளாக சரிவௌ கண்டது.
தகவல் தொழில்நுட்பத் துறை 1.50% சரிந்து 6,296.78 புள்ளிகளாக நிறைவுற்றது. எப்போதும் உயர்வடைந்து வரும் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் இன்று 1.94% சரிவு கண்டு பங்கு ஒன்றுக்கு ரூ.3,082.20ஆக குறைந்தது.