மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 20,256 புள்ளிகளில் முடிவடைந்தது.
பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்டிஎப்ஸி வங்கி, ஐடிசி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.
சிப்லா, விப்ரோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 6,060 புள்ளிகளில் முடிவடைந்தது,