மொஹரம் பண்டிகையை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று சந்தை முடிவில் மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்ந்து 19,864.85 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண் நிஃப்டி 56.45 புள்ளிகள் உயர்ந்து 5948.75 புள்ளிகளில் நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது.