மும்பைப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று துவக்க வர்த்தகத்தில் 104 புள்ளிகள் சரிந்தது.
கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் நன்றாக உயர்ந்த சென்செக்ஸ் இன்று மற்ற ஆசியப் பங்குச்சந்தைகளின் இறங்கு முகத்தினால் சரிவு கண்டது.
தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 5600 புள்ளிகளிலிருந்து இன்று காலை 5,567.75 புள்ளிகளாகக் குறைந்தது.
ஹாங்காங்கின் ஹாங்செங், ஜப்பானின் நிக்கி,, அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் ஆகியப் பங்குச் சந்தைகளிலும் சரிவு நிலை காணப்படுகிறது.