அதிக விலைப் பங்குகளை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வாங்கத் துவங்கியதையடுத்து மும்பை, தேசப் பங்குச் சந்தைகளில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கியுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் 191 புள்ளிகள் இழந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், இன்று காலை வர்த்தகத்தில் 82 புள்ளிகள் உயர்ந்தது. தேச பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 23 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இந்திய பங்குச் சந்தைகள் காணும் உயர்விற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.