Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை சரிவு

பங்குச் சந்தை சரிவு
மும்பை: , புதன், 28 ஏப்ரல் 2010 (09:50 IST)
பங்குச் சந்தைகளில் இரண்டாவது நாளாக இன்றும் சென்செக்ஸ் 172, நிஃப்டி 54 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.
கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கிரிஸ் நாட்டின் கடன் பத்திரங்களின் மதிப்பை ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர் ஆய்வு நிறுவனம் குறைத்து ஆய்வறிக்கை வெளியிட்டது. இதன் பாதிப்பு மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும். இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. இன்று ஆசிய நாட்டு சந்தைகளிலும் பாதகமான நிலை நிலவியது.
அத்துடன் ஏப்ரல் மாத முன்பேர சந்தை ஒப்பந்தங்கள் நாளை முடிவடைகின்றது. எனவே இன்றும் பங்குச் சந்தை அதிக மாற்றத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
காலை 9.36 மணியளவில், மும்பபங்குசசந்தையினசென்செக்ஸ் 145.36 புள்ளிகள் (BSE-sensex) குறைந்து, குறியீட்டு எண் 17,545.26 ஆக குறைந்தது.
தேசிபங்குசசந்தையினநிஃப்டி 44.30 புள்ளிகளகுறைந்து, குறியீட்டு எண் 5,264.05 ஆக குறைந்தது.
மிட்கேப் 70.95, சுமால்கேப் 110.03, பிஎஸ்இ-500 56.82 புள்ளிகள் குறைந்தன.

காலை 9.38 மணியளவில் 505 பங்குகளின் விலை அதிகரித்தது. 1659 பங்குகளின் விலை குறைந்தது. 44 பங்குகளின் விலை மாற்றமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil