மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் அப்படியே இருந்தது. இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் இருந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 332 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,413 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 2835 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை சென்செக்ஸ் 137புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் துவங்கியது. அப்போது குறியீட்டு எண் 9,208 ஆக இருந்தது. முற்பகல் 11.55 மணியளவில் சென்செக்ஸ் புள்ளிகள் 9,388 வரை உயர்ந்திருந்தது. இன்று முழுவதும் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தே காணப்பட்டன.
ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் இன்று உயர்ந்து காணப்பட்டன. ரிலையன்ஸ் 9 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 10.4 சதவீதமும், ரிலையன்ஸ் இன்பாஸ்டிரக்சர் 9.7 சதவீதமும் உயர்ந்தன.
இன்போஸிஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா ஸ்டீல், ஜெய்பிரகாஷ் அசோஸியேசன்ஸ். ஹின்டல்கோ, ஸ்டெரிலைட், ஐசிஐசிஐ மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்திருந்தன. கிராஸிம் நிறுவனப் பங்குகள் 3.5 சதவீதமும், சன் ஃபார்மா மற்றும் எச்.டி.எப்.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1 சதவீதமும் சரிந்து காணப்பட்டன.
மாலையில், வர்த்தகம் முடிவடையும் போது சென்செக்ஸ் 332 புள்ளிகள் உயர்ந்து 9,413ல் நிலைகொண்டது. வர்த்தகத்துக்கு எடுத்துகொள்ளப்பட்ட 2,489 பங்குகளில், 1,246 நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தது.
1,402 நிறுவனப் பங்குகளின் மதிப்பு குறைந்திருந்தது. இதர நிறுவனங்களின் பங்குகளில் மாற்றமில்லை.
அதேவேளையில், தேசியப் பங்குச் சந்தையில் நிப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 2835 ஆக இருந்தது.