மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தம் தொடங்கும் போது சென்செக்ஸ் 307 புள்ளிகளும், நிஃப்டி 77 புள்ளிகளும் உயர்ந்திருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடைந்தபோது சென்செக்ஸ் 38 புள்ளிகள் சரிந்து 9,171ல் நிலை கொண்டது.
இன்று காலை சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் துவங்கியது. அப்போது குறியீட்டு எண் 9,208 ஆக இருந்தது.
முற்பகல் 11.55 மணியளவில் சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து, குறியீட்டு எண் 9,378 ஆக இருந்தது.
ஸ்டெரிலைட் நிறுவனப் பங்குகள் 6.5 சதவீதமும், டாடா ஸ்டீல் மற்றும் இன்போஸிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 6 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன. ரிலையன்ஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவற்றின் பங்குகள் 5.7 சதவீதம் உயர்ந்திருந்தது.
ரிலையன்ஸ் இன்பாஸ்டிரக்சர், ஜெய்பிரகாஸ் அசோஸியேட்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகளும் அதிகரித்தன.
எனினும் சன் ஃபார்மா நிறுவனத்தின் பங்குகள் 1 சதவீதம் குறைந்து காணப்பட்டது.
இன்று வர்த்தகத்துக்கு எடுத்துகொள்ளப்பட்ட 2,018 பங்குகளில், 1,246 நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தது. 693 நிறுவனப் பங்குகளின் மதிப்பு குறைந்திருந்தது. இதர நிறுவனங்களின் பங்குகளில் மாற்றமில்லை.
அதேவேளையில், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 77 புள்ளிகள் அதிகரித்து 2,822ஆக இருந்தது.