மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.150 அதிகரித்தது.
ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 40 குறைந்தது.
இதற்கு நேர்மாறாக சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை அதிகரித்தது. வெள்ளியின் விலை குறைந்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 733- 733.50 டாலராக அதிகரித்தது. (வெள்ளிக் கிழமை விலை 730.00731.25)
பார் வெள்ளியின் விலை 9.80- 9.82 டாலராக குறைந்தது. (வெள்ளிக்கிழமை விலை 9.859.86).
இன்று காலை விலை நிலவரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,845
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,777
பார் வெள்ளி கிலோ ரூ.17,615.