சென்செக்ஸ் 191 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 1,071 புள்ளிகள் சரிவுடன் 8,701ல் நிலைகொண்டது. இன்று காலை 101 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய வர்த்தகம், தொடர்ந்து சரிந்து கொண்டிருந்தது.
மதியம் வாக்கில் 1000 புள்ளிகள் வரை சரிந்து, சென்செக்ஸ் 8 ஆயிரத்துக்கும் கீழே சென்றது. வரலாறு காணாத இந்த சரிவால், இன்றைய தீபாவளி பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு கறுப்பு தீபாவளியாகவே அமைந்தது.
எனினும், மதியத்துக்கு பின்னர் சென்செக்ஸ் சிறிது முன்னேற்றம் கண்டது. மாலையில் வர்த்தகம் முடைவடையும்போது, சென்செக்ஸ் 191 புள்ளிகள் அதிகரித்து 8,509ல் நிலை கொண்டது.
இன்று வர்த்தகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மொத்த பங்குகள் 2,577ல் 2,016 பங்குகள் சரிந்திருந்தன. 519 பங்குகள் உயர்ந்திருந்தன.
42 பங்குகளில் மாற்றமில்லை. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் (ஆர்ஐஎல்) (6%), ரிலையன்ஸ் இன்பாஸ்டிரக்சர் (4%), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் , ஸ்டெரிலைட் (3.5%) மற்றும் ஐசிஐசிஐ நிறுவனப் பங்குகள் (2%) உயர்ந்து காணப்பட்டன.
டாடா மோட்டார்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஜெய்பிரகாஷ் அசோஸியேட்ஸ், டாடா பவர் மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றின் நிறுவனப் பங்குகள் சரிந்திருந்தன.
அதே நேரத்தில் தேசியப் பங்குச் சந்தையில் நிப்டி 60 புள்ளிகள் சரிந்து 2,524 ஆக இருந்தது.