கர்நாடகாவில் விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று சென்னை கோயம்பேடு வியாபாரிகள் சங்கத் தலைவர் ராம்பிரகாஷ் தெரிவித்தார். இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று மேலும் கூறினார்.
கர்நாடகா மாநிலம் கோலார், மாளூர் மற்றும் ஆந்திராவில் தக்காளி விளைச்சல் இல்லாததால் சென்னை கோயம்பேட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் கிலோ 30 ரூபாய்க்கு விற்ற தக்காளி இன்று ரூ.20 உயர்ந்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்பு ஒரு நாளைக்கு 250 முதல் 300 லாரிகள் கோயம்பேட்டிற்கு வரும், தற்போது 100 லாரிகள் மட்டுமே வருகிறது என்று ராம்பிரகாஷ் தெரிவித்தார்.
கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட மிளகாய் இன்று மேலும் 10 ரூபாய் உயர்ந்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் கோஸ், பீன்ஸ், அவரைக்காய் ஆகியவற்றின் விலை கனிசமாக உயர்ந்துள்ளது.
பழங்கள் விலை அப்படியே உள்ளது. பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி, பழங்கள், பூக்கள் விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
கோஸ் ரூ.10
கேரட் ரூ.30
பீட்ரூட் ரூ.15
சவ்சவ் ரூ.12
நூக்கோல் ரூ.12
முள்ளங்கி ரூ.10
வெள்ளரிக்காய் ரூ.10
பீன்ஸ் ரூ.30
கத்திரிக்காய் ரூ.10
அவரைக்காய் ரூ.30
புடலங்காய் ரூ.10
வெண்டைக்காய் ரூ.12
மிளகாய் ரூ.20
குடை மிளகாய் ரூ.30
முருங்கக்காய் ரூ.30
இஞ்சி ரூ.30
தேங்காய் (ஒன்று) ரூ.09
சேனைக் கிழங்கு ரூ.10
சேம்பு ரூ.15
உருளைக்கிழங்கு ரூ.12
கோவக்காய் ரூ.10
சுரக்காய் ரூ.09
நாட்டு தக்காளி ரூ.50
பெங்களூரு தக்காளி ரூ.50
பூசணி ரூ.12
நாசிக் வெங்காயம் ரூ.10
சாம்பார் வெங்காயம் ரூ.22
பாகற்காய் ரூ.15
காலிபிளவர் (ஒன்று) ரூ.10
பரங்கிகாய் ரூ.12
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.260
இந்தியன் ஆப்பிள் ரூ.52
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.95
நாவல் ஆரஞ்சு ரூ.75
இந்தியன் ஆரஞ்சு ரூ.35
சாத்துக்குடி ரூ.12
கொய்யா ரூ.18
கருப்பு திராட்சை ரூ.27
பச்சை திராட்சை ரூ.42
கணேஷ் மாதுளை ரூ.55
காபூல் மாதுளை ரூ.64
செவ்வாழைப்பழம் ரூ.31
கற்பூரவள்ளி ரூ.17
ரஸ்தாளி ரூ.19
பச்சை வாழைப்பழம் ரூ.12
பப்பாளி ரூ.13
சப்போட்டா ரூ.25
கிரினி பழம் ரூ.13
தர்பூசணி ரூ.15
நேந்திரம் பழம் ரூ.28
அத்திப்பழம் ரூ.40
மலவாழைப்பழம் ரூ.35
சீத்தா ரூ.25
ரூமேனியா ரூ.40
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.250
ஜாதி மல்லி ரூ.200
முல்லை ரூ.200
கனகாமரம் ரூ.400
சாம்பந்தி ரூ.60
சம்பங்கி ரூ.80
100 ரோஸ் ரூ.30
குயின் ரோஸ் ரூ.30
கோழி கொண்டை ரூ.80
வாடா மல்லி ரூ.80
செண்டு பூ ரூ.80
அரளி பூ ரூ.80