அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 53 பைசா உயர்ந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை கடந்த வெள்ளியன்று நிறைவடையும் போது ரூ.46.88 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.46.35 ஆக உயர்ந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 93 டாலருக்கும் கீழாக சரிந்துள்ளதும், இந்திய அன்னிய செலாவணி சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு காரணம் என வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.