விளைச்சல் குறைவாக இருப்பதாலும் வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று முன்னாள் கோயம்பேடு வியாபாரிகள் சங்கத் தலைவரும், ஆலோசனை கமிட்டி உறுப்பினருமான செளந்தரராஜன் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் கோலாறு, மாதூர், சிந்தாமணி, தமிழகத்தில் இருந்து ஓசூர், திண்டுக்கல், தேனி, கம்பம் போன்ற இடங்களில் இருந்து ஒருநாளைக்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 40 தக்காளி லாரிகள் வரும்.
தற்போது விளைச்சல் குறைவாக இருப்பதால் ஒரு நாளைக்கு 20 லாரிகளே வருகின்றன. இதனால் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளி வரத்து குறைந்து விட்டதால் ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சில நாட்கள் இருக்கும் என்றும் செளந்தரராஜன் கூறினார்.
நேற்று முன்தினம் கிலோ 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ், இன்று 6 ரூபாய் குறைந்து 26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் கிலோவுக்கு ரூ.4 உயர்ந்து 32 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மற்ற காய்கறிகள் விலைகள் சிறிய மாற்றமே இருந்தது. பூக்கள் விலைகள் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. பழங்கள் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி, பழங்கள், பூக்கள் விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
கோஸ் ரூ.05
கேரட் ரூ.26, 27
பீட்ரூட் ரூ.10
சவ்சவ் ரூ.10
நூக்கோல் ரூ.10
முள்ளங்கி ரூ.10
வெள்ளரிக்காய் ரூ.12
பீன்ஸ் ரூ.26
கத்திரிக்காய் ரூ.10
அவரைக்காய் ரூ.32
புடலங்காய் ரூ.10
வெண்டைக்காய் ரூ.12
மிளகாய் ரூ.09
குடை மிளகாய் ரூ.30, 40
முருங்கக்காய் ரூ.12
இஞ்சி ரூ.30
தேங்காய் (ஒன்று) ரூ.09
சேனைக் கிழங்கு ரூ.12
சேம்பு ரூ.14
உருளைக்கிழங்கு ரூ.12
கோவக்காய் ரூ.10
சுரக்காய் ரூ.06
நாட்டு தக்காளி ரூ.26
பெங்களூரு தக்காளி ரூ.26
பூசணி ரூ.05
நாசிக் வெங்காயம் ரூ.12
சாம்பார் வெங்காயம் ரூ.20
பாகற்காய் ரூ.15
காலிபிளவர் (ஒன்று) ரூ.10
பரங்கிகாய் ரூ.05
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.240
இந்தியன் ஆப்பிள் ரூ.57
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.95
நாவல் ஆரஞ்சு ரூ.70
இந்தியன் ஆரஞ்சு ரூ.50
சாத்துக்குடி ரூ.18
கொய்யா ரூ.16
கருப்பு திராட்சை ரூ.27
பச்சை திராட்சை ரூ.45
கணேஷ் மாதுளை ரூ.65
காபூல் மாதுளை ரூ.70
செவ்வாழைப்பழம் ரூ.32
கற்பூரவள்ளி ரூ.17
ரஸ்தாளி ரூ.20
பச்சை வாழைப்பழம் ரூ.13
பப்பாளி ரூ.10
சப்போட்டா ரூ.30
கிரினி பழம் ரூ.12
தர்பூசணி ரூ.07
நேந்திரம் பழம் ரூ.34
அத்திப்பழம் ரூ.37
மலவாழைப்பழம் ரூ.36
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.300
ஜாதி மல்லி ரூ.200
முல்லை ரூ.200
கனகாமரம் ரூ.500
சாம்பந்தி ரூ.100
சம்பங்கி ரூ.100
100 ரோஸ் ரூ.20
குயின் ரோஸ் ரூ.30
கோழி கொண்டை ரூ.60
வாடா மல்லி ரூ.60
செண்டு பூ ரூ.60
அரளி பூ ரூ.60