அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 19 பைசா சரிந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை கடந்த வெள்ளியன்று நிறைவடையும் போது ரூ.45.73 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.45.92 ஆக சரிந்தது.
ஆசிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியே டாலர் மதிப்பு சரிவுக்கு காரணம் என்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.