அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 28 பைசா சரிந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை நேற்று நிறைவடையும் போது ரூ.45.12/13 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.45.40/41 ஆக சரிந்தது.
கடந்த 2006 நவம்பர் 24ஆம் தேதிக்கு பின்னர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45.47 ரூபாயை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.