அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 20 பைசா சரிந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை நேற்று நிறைவடையும் போது ரூ.44.84/85 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.45.05/6 ஆக சரிந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது மீண்டும் ரூ.45ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.