அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 29 பைசா சரிந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை நேற்று நிறைவடையும் போது ரூ.44.59/60 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.44.88/90 ஆக சரிந்தது.
இன்று ஏற்பட்ட சரிவு (44.90) கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான சரிவு என வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.