மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், இறுதிவரை குறையாமல் அதிகரித்தன.
இன்று சென்செக்ஸ் 15,000, நிஃப்டி 4,500 புள்ளிகளை தாண்டின. உலக சந்தையில் கச்சை எண்ணெய் விலை பீப்பாய்க்கு 106 டாலராக குறைந்தது. இது பங்குச் சந்தைக்கு அதிக ஊக்கம் அளிப்பதாக இருந்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வங்கி, பெட்ரோலிய நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் பிரிவு பங்குகளில் ஆர்வத்துடன் முதலீடு செய்தன.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 551.35 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,049.86 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 155.35 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4504.00 ஆக அதிகரித்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,675 பங்குகளின் விலை அதிகரித்தது, 986 பங்குகளின் விலை குறைந்தது, 72 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 95.03, சுமால் கேப் பிரிவு 91.00, பி.எஸ்.இ. 100- 266.28, பி.எஸ்.இ. 200- 58.98, பி.எஸ்.இ.-500 175.39 புள்ளிகள் அதிகரித்தது.
ரியல் எஸ்டேட் பிரிவு குறியீட்டு எண் 7.35% வங்கி பிரிவு 6.06%, பொதுத்துறை பிரிவு பங்குகளின் விலை 3.76%, நுகர்வோர் பொருட்கள் 3.70%, மின் உற்பத்தி 3.62%, பெட்ரோலிய நிறுவனங்கள் 3.48%, தகவல் தொழில் நுட்பம் 2.85% அதிகரித்தன.
எந்த பிரிவு குறியீட்டு எண்ணும் குறையவில்லை.