Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 134, நிஃப்டி 47 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 134, நிஃப்டி 47 புள்ளிகள் உயர்வு!
, புதன், 20 ஆகஸ்ட் 2008 (17:07 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் உயர்ந்தன. கடைசி வரை படிப்படியாக அதிகரித்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 134.50 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 14,678.23 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 47.50 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4415.75 ஆக உயர்ந்தது.

ஐரோப்பாவில் இத்தாலி, சுவிட்சர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. மாலை 5.00 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 40.20 புள்ளி அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,666 பங்குகளின் விலை அதிகரித்தது, 969 பங்குகளின் விலை குறைந்தது, 83 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி, உலோக உற்பத்தி, பொதுத்துறை நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 60.05, சுமால் கேப் பிரிவு 53.49, பி.எஸ்.இ. 100- 75.83, பி.எஸ்.இ 200- 17.58 பி.எஸ்.இ-500 55.37 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 71.65, சி.என்.எக்ஸ். ஐ.டி. 14.60, பாங்க் நிஃப்டி 33.90, சி.என்.எக்ஸ்.100- 44.85, சி.என்.எக்ஸ். டிப்டி 22.30, சி.என்.எக்ஸ். 500- 36.15, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 52.80, மிட் கேப் 50- 28.10 புள்ளிகள் அதிகரித்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் செயில் 5.67%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 3.83%, ஏ.பி.பி 3.73%, கிரேசம் 3.59%, பி.ஹெச்.இ.எல் 3.38% பார்தி ஏர்டெல் 3.04% உயர்ந்தது.

ஓ.என்.ஜி.சி 2.58%, மகேந்திரா அண்ட் மகேந்திரா 2.12%, சுல்ஜான் 0.86%, சத்யம் கம்ப்யூட்டர் 0.56%, ஐ.டி.சி 0.27% குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil