மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், கடைசி வரை தொடர்ந்து அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 336.10 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,503.92 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 90.90 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4605.80 ஆக உயர்ந்தது.
ஐரோப்பாவில் எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. 4.40 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ.100- 51.70 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,738 பங்குகளின் விலை அதிகரித்தது. 970 பங்குகளின் விலை குறைந்தது. 68 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 95.17, சுமால் கேப் 89.61, பி.எஸ்.இ.100- 173.73, பி.எஸ்.இ 200- 39.23, பி.எஸ்.இ.-500 119.97 புள்ளிகள் அதிகரித்தது.
இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், வங்கி, பெட்ரோலிய நிறுவனங்கள், பொதுத்துறை பிரிவு, மின் உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 189.65, சி.என்.எக்ஸ். ஐ.டி. 01.05, பாங்க் நிஃப்டி 275.70, சி.என்.எக்ஸ்.100- 90.15, சி.என்.எக்ஸ். டிப்டி 77.95, சி.என்.எக்ஸ். 500- 72.80, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 87.70, மிட் கேப் 50- 44.10, புள்ளி அதிகரித்தது.
நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் ரியலையன்ஸ் இன்ப்ரா 6.75%, யூனிடெக் 6.24%, மாருதி 5.90%, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 5.41%, எஸ்.பி.ஐ. 5.28%, ஹெச்..சி.எல் டெக் 4.15%, உயர்ந்தது.
டாக்டர் ரெட்டி 2.72%, ஸ்டெர்லைட் 2.58%, டி.சி.எஸ். 1.32%, டாடா ஸ்டீல் 1.17%, ஐடியா செல்லுலர் 0.89%, விலை குறைந்தது.