பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த குறியீட்டு எண்கள் இன்று அதிகரித்தன. பங்குகளின் விலைகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் இறுதியில் பங்குச் சந்தைகள் அதிகரித்தன.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 536.05 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 13,111.85 ஆக அதிகரித்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் சரிந்தன. மாலை 4.25 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்.டி.எஸ்.இ.-100 99 புள்ளி அதிகரித்தது.
அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 130.50 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3,947.20 ஆக உயர்ந்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1536 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,081 பங்குகளின் விலை குறைந்தது, 74 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 67.06 சுமால் கேப் 62.67 பி.எஸ்.இ. 100- 233.83 பி.எஸ்.இ 200-50.88 பி.எஸ்.இ.-500 150.22 புள்ளி அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 193.35 சி.என்.எக்ஸ். ஐ.டி 125.85 பாங்க் நிஃப்டி 308.30 சி.என்.எக்ஸ்.100- 122.95 சி.என்.எக்ஸ். டிப்டி 119.60 சி.என்.எக்ஸ். 500- 96.30 சி.என்.எக்ஸ். மிட் கேப் 94.95 மிட் கேப் 50- 44.80 புள்ளி அதிகரித்தது.