Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 95 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 95 புள்ளிகள் சரிவு!
, வியாழன், 10 ஏப்ரல் 2008 (17:12 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்திருந்த குறியீட்டு எண்கள் சி‌றிது நேரத்திலேயே அதிகரிக்க துவங்கின.

அதிக ஏற்ற இறக்கமாக இருந்த குறியீட்டு எண்கள் மதியம் 3 மணிக்கு பிறகு குறைய தொடங்கின. இறுதியில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட சென்செக்ஸ், நிஃப்டி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஜப்பான் தவிர, சீனா, ஹாங்காங், தென்கொரிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இறுதியில் 95.41 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,695.10 ஆக குறைந்தது. இதே போல் பி.எஸ்.இ. 500- 15.70 புள்ளி குறைந்தது.

ஆனால் சுமால் கேப் 89.95, மிட் கேப் 7.45 புள்ளி அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14.05 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 4733.00 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 50.90, சி.என்.எக்ஸ். ஐ.டி 0.75, பாங்க் நிஃப்டி 186.70, சி.என்.எக்ஸ்.100- 16.10, சி.என்.எக்ஸ்.டிப்டி 5.15, சி.என்.எக்ஸ். 500- 13.65 புள்ளி குறைந்தது. ஆனால் சி.என்.எக்ஸ். மிட் கேப் 8.05, சி.என்.எக்ஸ் மிட் கேப்50-9.70 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,715 பங்குகளின் விலை அதிகரித்தது. 948 பங்குகளின் விலை குறைந்தது, 67 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.77%, தொழில்நுட்ப பிரிவு 1.27%, உலோக உற்பத்தி பிரிவு 0.55%, வாகன உற்பத்தி பிரிவு 0.33%, வங்கி பிரிவு 2.94%,%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.29% அதிகரித்தன.

பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 1.47%, மின் உற்பத்தி பிரிவு 0.39%,பொதுத்துறை நிறுவனங்கள் 0.14, ரியல் எஸ்டேட் 1.05% குறைந்தன.

Share this Story:

Follow Webdunia tamil