மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சிறிதளவு ஏற்ற இறக்கமாக இருந்தாலும், இறுதிவரை தொடர்ந்து அதிகரித்தன.
பங்குகளின் விலைகள் குறைவாக இருந்ததால், முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை வாங்கினார்கள். இந்தியாவில் மட்டுமல்லாது, ஆசிய, ஐரோப்பிய நாடு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.
இதனால் இன்று காலை முதல் மாலை வர்த்தகம் முடியும் வரை எல்லா பிரிவிலும் உள்ள பங்குகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இறுதியில் 413.96 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,757.08 12 ஆக உயர்ந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 114.20 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 4761.20 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 62.95, மிட் கேப் 81.87, பி.எஸ்.இ. 500- 142.80 புள்ளிகள் அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 208.50, பாங்க் நிஃப்டி 287.25, சி.என்.எக்ஸ். ஐ.டி.90.60, சி.என்.எக்ஸ்.100-110.70, சி.என்.எக்ஸ். 500-82.55, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 91.95, சி.என்.எக்ஸ். மிட் கேப்50 - 30.20, சி.என்.எக்ஸ். டிப்டி 104.10 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,556 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,071 பங்குகளின் விலை குறைந்தது, 57 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
ரியல் எஸ்டேட் 1.86%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.66%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 2.60%, தொழில்நுட்ப பிரிவு 2.04%, உலோக உற்பத்தி பிரிவு 2.76 %, வாகன உற்பத்தி பிரிவு 1.27%, வங்கி பிரிவு 4.14%, மின் உற்பத்தி பிரிவு 1.44%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.30%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.07% அதிகரித்தன.