மும்பை சந்தையில் கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து வந்த தங்கம், வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. தங்கத்தின் விலை 10 கிராமிற்கு இன்று ரூ.50ம், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.30ம் குறைந்துள்ளது.
நியூயார்க் சந்தையில் நேற்று அவுன்ஸ் 951.80/952.60 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 948.80/949.60 டாலராகவும், அவுன்ஸ் 18.50/18.55 டாலராக இருந்த வெள்ளியின் இன்று 18.48/18.53 டாலராகவும் குறைந்துள்ளது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,340
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,280
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,845