மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.225-ம், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.135-ம் குறைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வெள்ளியின் விலை ரூ.735-ம், தங்கத்தின் விலை ரூ.515-ம் குறைந்துள்ளது.
மும்பை சந்தையில் இன்று காலை ரூ.12,965 ஆக இருந்த 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சற்று அதிகரித்து ரூ.12,980 ஆக உள்ளது.
லண்டன், ஆசிய சந்தை நிலவரப்படி, அவுன்ஸ் 998.50 அமெரிக்க டாலராக இருந்த தங்கத்தின் விலை 997 டாலராகவும், அவுன்ஸ் 19.85 டாலராக இருந்த வெள்ளியின் விலை 19.80 டாலராகவும் குறைந்துள்ளது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,035 (நேற்று ரூ.13,260)
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,980 (13,205)
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,915 (25,050)