Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை உயர்வு

பங்குச் சந்தை உயர்வு
, செவ்வாய், 11 மார்ச் 2008 (12:25 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலகுறைந்திருந்குறியீட்டஎண்களசுமார் 10 மணியளவிலஅதிகரிக்துவங்கின.

நேற்றைநிலையிலஇருந்து, பங்குசசந்தஉயதுவங்கியதாலவர்த்தகர்களநிம்மதி பெருமூச்சவிட்டனர்.

காலை 11.15 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 126.09 புள்ளிகள் அதிகரித்தகுறியீட்டு எண் 16,049.81 ஆக உயர்ந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 35.85 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4836.25 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 140.38, சுமால் கேப் 227.16, பி.எஸ்.இ. 500-97.15 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 0.48 முதல் 2.64 விழுக்காடு வரை அதிகரித்து இருந்தன.

காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 184 புள்ளிகளும், நிஃப்டி 67.55 புள்ளிகளும் குறைந்து இருந்தது. எல்.அண்ட்.டி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், இன்போசியஸ், ஏ.சி.சி ஆகிய பங்குகளின் விலைகள் குறைந்ததே, குறியீட்டு எண்கள் காலையில் குறைந்ததற்கு காரணம்.

இன்று காலை நடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் எல் அண்ட் டி, ரிலையன்ஸ் எனர்ஜி போன்ற நிறுவனங்களின் பங்கு விலை அதிக அளவு குறைந்ததால், குறியீட்டு எண்கள் சரிந்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 153.54, நாஸ்டாக் 43.15 புள்ளிகள் குறைந்து இருந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 36.02 புள்ளிகள் குறைந்து இருந்தது.

ஆனால் ஹாங்காங்கின் ஹாங்செங் 301.70,சீனாவின் சாங்காய் காம்போசிட் 43.79 குறைந்து இருந்தது.

ஜப்பானின் நிக்கி 126.15,சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 22.55 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலை 11.45 மணி முதல் நண்பகல் 12.30 வரை வர்த்தகம் நிறுத்தப்படும். மீண்டும் 12.30 மணியளவில் வர்த்தகம் தொடங்கி மாலை 4.15 வரை நடைபெறும்.

Share this Story:

Follow Webdunia tamil