மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, பங்குகளின் விலை குறைந்து குறியீட்டு எண்கள் சரிந்தன. இந்த நிலை மதியம் 1 மணியளவில் மாறியது.
இன்று வர்த்தகம் நடந்த போது அதிகபட்சமாக சென்செக்ஸ் 323.64 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,861.83 ஆக உயர்ந்த்து. ஒரு நிலையில் 20,438.19 புள்ளிகளாக குறைந்தது.
இதே போல் தேசிய பங்கச் சந்தையின் நிஃப்டி அதிக மாற்றமில்லை. வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 4.80 புள்ளிகள் அதிகரித்தது. இன்று இறுதியில் நிஃப்டி 6,279.10 புள்ளிகளாக முடிந்தது. வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 6,274.30.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 10.83 புள்ளிகள் குறைந்தது. சுமால் கேப் 91.08, பி.எஸ்.இ-500 31.80 புள்ளிகள் அதிகரித்தன.
இன்று நுகர்வோர் பொருட் உற்பத்தி நிறுவனம், ரியல் எஸ்டேட், வங்கி பங்குகளின் விலைகள் அதிகரித்தன. தகவல் தொழில்நுட்பம், உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்தன. வாகன துறையில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை சிறிதளவே குறைந்தது.