மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் இருந்தே பங்குகளின் விலைகள் சீராக அதிகரித்து வந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடஙகும் போதே சென்செக்ஸ் 86.84 புள்ளிகள் அதிகரித்தது. ஒரு நிலையில் சென்செக்ஸ் 20,211.47 புள்ளிகளாக உயர்ந்தது. இறுதியில் சென்செக்ஸ் 338.40 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,211.47 புள்ளிகளாக முடிந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 85.65 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6,070.75 ஆக முடிந்தது.
இன்று பங்குச் சந்தையின் உயர்வுக்கு அறக்கட்டளைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்ற தகவல் சாதகமான அம்சமாக இருந்தது என்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 189.15, சுமால் கேப் 361.92, பி.எஸ்.இ-500 172 புள்ளிகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன.