வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் டாலரின் மதிப்பு சரிந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து. 1 டாலர் ரூ.39.41/ 43 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது. இது நேற்றைய இறுதி விலையுடன் ஒப்பிடுகையில் 1 டாலரின் மதிப்பு 10 பைசா குறைந்தது. (நேற்றைய இறுதி விலை ரூ.39.31).
காலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 469 புள்ளிகள் குறைந்தது. இதன் எதிரொலியாக அந்நியச் செலவாணி சந்தையிலும் டாலரின் மதிப்பு குறைந்து. அத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி டாலரை அதிகளவு விற்பனை செய்தது.
இன்று 1 டாலர் ரூ.39.31 பைசா முதல் ரூ.39.43 பைசா வரை விற்பனையானது.
இறுதியில் 1 டாலர் ரூ.39.31 / 39.32 பைசா என்ற அளவில் முடிந்தது. நேற்றைய இறுதி விலை ரூ.39.30 / 39.31.
இன்று ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.37 ஆக அறிவித்தது.