வங்கிகளுக்கு இடையிலான அந்நிய.ச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ. 39.40/42 என்று விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 10 பைசா அதிகம்.
காலை 11 மணியளவில் 1 டாலர் ரூ. 39.35 முதல் ரூ. 39.45 வரை விற்பனையானது.
சர்வதேச சந்தையில் நிலவும் போக்காலும், பங்கு சந்தையில் அந்நிய முதலி்ட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்து, டாலராக மாற்றுவதால்
டாலரின் தேவை அதிகரித்தது. அத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி டாலரை விற்பனை செய்தது. இவையே டாலரின் மதிப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைய காரணம்.