கடந்த திங்கட்கிழமை அன்று 14 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் தற்போது ரூ.10 உயர்ந்து 24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் காய் கறிகளின் விலைகள் அவ்வப்போது உயர்ந்து வருகிறது. சாம்பார் வெங்காயம் விலை கடும் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து காய் கறி விற்பனை சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது மழை பலத்த மழை பெய்து வருவதால் திண்டுக்கல், ஈரோடு, ஓட்டன் சத்திரம் ஆகிய பகுதியில் இருந்து சாம்பார் வெங்காய வரத்து குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 30 முதல் 40 மூட்டைகள் வரும். தற்போது மூன்று அல்லது ஒரு மூட்டை வெங்காயம்தான் வருகிறது. அதனால்தான் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றார்.
தற்போது நாசிக் வெங்காயம் சீசன் கிடையாது. சீசன் நேரங்களில் ஒரு நாளைக்கு 30 மூட்டைகள் வந்தது. இதனால் விலையும் குறைவாக இருந்தது. தற்போது மார்க்கெட்டுக்கு இரண்டு மூட்டைகள் வருவதால் விலை அதிகரித்துள்ளது என்று செளந்தரராஜன் கூறினார்.
தற்போது பெங்களூர் வெங்காயம் சீசன் இருப்பதால் வரத்தும் அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 40 வண்டிகள் வருகின்றன. இதனால் விலையும் சற்று குறைவாக இருக்கிறது. காய் கறி விலைகள் எப்போதும் ஒன்றுபோல் இருக்காது. மாறி மாறிக் கொண்டே இருக்கும் என்று காய் கறி விற்பனை சங்கத் தலைவர் செளந்ததராஜன் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
நாசிக் வெங்காயம் ரூ.20
பெரிய வெங்காயம் ரூ.18
சாம்பார் வெங்காயம் ரூ.24
கத்தரிக்காய் ரூ.07
வெண்டைக்காய் ரூ.08
பீன்ஸ் ரூ.14
புடலங்காய் ரூ.10
ஊட்டி கேரட் ரூ.15
பெங்களூர் கேரட் ரூ.12
நாட்டு தக்காளி ரூ.08
பெங்களூர் தக்காளி ரூ.10
உருளைக்கிழங்கு ரூ.14
சேனைக் கிழங்கு ரூ.05
கோஸ் ரூ.05
பாகற்காய் ரூ.10
முள்ளங்கி ரூ.07
பீட்ரூட் ரூ.08
அவரைக்காய் ரூ.18
கோவக்காய் ரூ.06
சுரக்காய் ரூ.04
மிளகாய் ரூ.10
இஞ்சி ரூ.25 முதல் 32 வரை
முருங்கக்காய் ரூ.26
வெள்ளரிக்காய் ரூ.05
பூசணி ரூ.03
சவ்சவ் ரூ.08
நுனுகோல் ரூ.08
பரங்கிகாய் ரூ.03
பட்டாணி ரூ.50
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஆப்பிள் ரூ.68
ஆரஞ்சு ரூ.36-52
சாத்துக்குடி ரூ.20
கொய்யா ரூ.18
க.திராட்சை ரூ.40
ப.திராட்சை ரூ.46
மாதுளை ரூ.30-40
சீத்தா ரூ.20
பப்பாளி ரூ.16
சப்போட்டா ரூ.30
கிரினி பழம் ரூ.20
தர்பூசணி ரூ.12