சிறு, குறுந்தொழில் பிரிவில் உள்ள தொழிற் கூடங்கள், மற்ற பெரிய நிறுவனங்களுக்கு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வழங்குகின்றன. இவைகளுக்கு பணம் கிடைப்பதில் தாமதம் இருந்தால், அதனை விசாரித்து பணம் பெற்றுத் தர தமிழ்நாடு அரசு வழங்கும் உற்பத்தி செய்த பொருட்களுக்கு பணம் கிடைப்பதில் தாமதம் இருந்தால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு வளர்ச்சி சட்டம் என்ற சட்டம் இயற்றியுள்ளது.
இந்த சட்டப்படி ஏற்கனவே சென்னையில் குறு மற்றும் சிறுதொழில் நிறுவன வசதியாக்க மன்றம் இயங்கி வருகிறது.
இப்போது இதே மாதிரியான மன்றம் மற்ற நான்கு முக்கிய நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு வளர்ச்சி சட்டம் 2006ன் கீழ் அரசாணை எண்.7, சிறு தொழில் துறை , நாள் 17.07.2007ன் படி சென்னை,
திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நான்கு குறு மற்றும் சிறுதொழில் நிறுவன வசதியாக்க மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சட்டத்தின் அடிப்படையில் குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய, காலதாமதமான பணப்பட்டுவாடாக்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இந்த தீர்வு மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருளை வாங்கும் நிறுவனம் உரிய காலத்தில் பணப்பட்டுவாடா செய்யாவிட்டால், அசல் தொகையுடன் ரிசர்வ் வங்கி விதித்துள்ள வட்டியினை போல 3 மடங்கு கூட்டு வட்டியும் சேர்த்து வசூல் செய்ய சட்டம்் வழிவகை செகிறது.
சென்னை குறு மற்றும் சிறுதொழில் நிறுவன வசதியாக்க மன்றம் 31.10.2007 முதல் ஏற்கனவே ஐந்து முறை கூடி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த குறு மற்றும் சிறு தொழில்
நிறுவனங்களின் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டது. இதில் 25 புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, ரூ. 94.15 இலட்சம் அளவில் நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகை பெற
ஆணை வழங்கப்பட்டது.
சென்ற 9 ஆம் தேதி (09.01.2009) தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆறாவது கூட்டத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 27 குறு மற்றும் சிறு தொழில் நிறுனங்களின் புகார் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. பணப்பட்டுவாடா செய்யாத நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, இவற்றில் 5 மனுக்கள் மீது ரூ.13.10 இலட்சம் அளவில் உடனடியாக இக்கூட்டத்திலேயே தீர்வு
காணப்பட்டன.
தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் கோ. சந்தானம், இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் உப தலைவர் சி.கே.மோகன், சிறு மற்றும் குறுந்தொழில்
நிறுவன தொழில் மற்றும் நிதி மறுசீரமைப்பு கூட்டமைப்பின் தலைவர் டி.இராமகிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளர் டி. கிருபாகரன் ஆகிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அரசாணைக்குட்பட்டு, பாக்கி தொகை சேர வேண்டிய குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தகுந்த ஆதாரங்கள் மற்றும் உறுதி மொழி பத்திரம், வேண்டுகோள் கடிதங்களுடன் கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நுண் மற்றும் சிறுதொழில்
நிறுவன வசதியாக்க மன்றத்தில் முறையிடலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.