Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடகனாறு அணை: நிபுணர் குழு ஆய்வு!

குடகனாறு அணை: நிபுணர் குழு ஆய்வு!
, வெள்ளி, 24 அக்டோபர் 2008 (18:26 IST)
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையை பொதுப்பணித் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் நேற்று பார்வையிட்டனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பெய்த பலத்த மழை காரணமாக வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணையின் பழைய ஷட்டர்களில் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 17 அடி தண்ணீர் வெளியேறியது.

குடகனாறு அணையில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு இருந்த ஐந்து ஷட்டர்களில் ஒன்று அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொதுப்பணித் துறையின் நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டனர்.

இவர்கள் நான்காவது ஷட்டர் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதையும் மாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே இருந்த 5 பழைய ஷட்டர்களையும் மாற்ற வேண்டும் என விவசாயிகள் சார்பில் அரசுக்கு பரிந்துரைத்தது.

இதனை ஏற்ற தமிழக அரசு 5 ஷட்டர்களையும் மாற்றுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 1 கோடியே 12 லட்சம் ஒதுக்கியது.

இதில் முதலாவது ஷட்டர் ஏற்கெனவே மாற்றப்பட்டு விட்டது. தற்போது நான்காவது ஷட்டரை மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணி ஒரு வார காலத்தில் முடிவடையும்.

கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் கனமழை காரணமாக அணைக்கு வந்த சுமார் 1000 கன அடி தண்ணீரும், வெளியேற்றப்பட்டது. நான்காவது ஷட்டர் அமைக்கும் பணி முடிவடைந்தவுடன், விவசாயிகள் நலன் கருதி தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்றும், மற்ற மூன்று ஷட்டர்களை கோடை காலத்தின் போது மாற்றலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்தப் பரிந்துரை தொடர்பாக நிபுணர் குழு வியாழக்கிழமை குடகனாறு அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளது.

இவர்கள் நான்காவது ஷட்டர் அமைக்கும் பணி முடிவடைந்தவுடன் தண்ணீரைத் தேக்கலாம் என அனுமதி வழங்கினால், குடகனாற்றில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இரா. வாசுகி கூறினார்.



Share this Story:

Follow Webdunia tamil