Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்!

சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்!
, செவ்வாய், 14 அக்டோபர் 2008 (13:55 IST)
தென்காசி: தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ஆகும் செலவில் அரசு 50 விழுக்காடு மானியம் வழங்குகிறது என்று தென்காசி தோட்டக்கலை உதவி இயக்குநர் சே.மதியழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.

பழமரங்கள், காய்கறி, மலர், வாசனை திரவிய பயிர்கள், தென்னை, கரும்பு போன்றவற்றை பயிர் செய்யும் விவசாயிகள், இந்த பயிர்களுக்கு தேவைப்படும் நீர்ப்பாசனத்திற்காக, சொட்டுநீர் பாசன வசதி அமைப்பதற்கு அரசு 50 விழுக்காடு மானியம் வழங்குகிறது.

இதை அமைக்க ஆகும் செலவில் மீதமுள்ள 50 விழுக்காடு தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம் அமைப்பதால், தண்ணீர் இல்லாமல் பயிர் வாடுவதை தவிர்த்து தேவைகேற்ப நீர்ப்பாசனம் செய்திடலாம்.

தோட்டக்கலை துறை மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க மாமரம், நெல்லி, கொய்யா, எலுமிச்சை, முந்திரி, வாழை, மலர்கள், கரும்புப், நறுமண மூலிகை பயிர்கள் ஆகியவைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசன வசதி செய்ய விரும்பும் தென்காசி வட்டார விவசாயிகள், தென்காசி உழவர்சந்தை வளாகத்திலுள்ள தோட்டக் கலை உதவி இயக்குநரை சந்தித்து பயன்பெறலாம் என்று கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil