தற்போதைய வானிலை கணிப்பின்படி தமிழக பகுதியில் தென் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பெரம்பலூர் மழைராஜ், தமிழ்.வெப்துனியா.காமிற்கு அனுப்பியுள்ள ஆய்வு முடிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அனுப்பிய ஆய்வில், கடந்த 9ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் 22ம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன்.
ஆனால் வானிலையில் ஏற்பட்ட மாறுபாடுகள் காரணமாக ஆந்திரா மற்றும் ஒரிசா பகுதியில் மழை பெய்தது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடித்தது.
இந்நிலையில் 19ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தமிழக பகுதியில் தென் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் 20ஆம் தேதி முதல் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் வடகிழக்கு பருவ மழை துவங்கும் வாய்ப்பும் உள்ளது.
மழை தேதியின் கணிப்பின்படி செப்டம்பர் 24 முதல் 26ம் தேதியும், 29 முதல் அக்டோபர் 1ம் தேதியும் பலத்த மழை பெய்யும் தேதியாகும்.
செப்டம்பர் 30ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.