Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் நீர் வரத்து அதிகரிப்பு!
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (11:20 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 82.57 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அணையின் நீர் வரத்து குறைந்தது. இன்று மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை அணைக்கு விநாடிக்கு 16,536 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 15,009 கன அடி திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,507, வென்னாற்றில் 8,043 கல்லணை கால்வாயில் 2,219, கொள்ளிடம் ஆற்றில் 1,217 கன அடி தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil