Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நூறு அடியை தொட்டது பவானிசாகர் அணை

நூறு அடியை தொட்டது பவானிசாகர் அணை
, செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (10:54 IST)
ஈரோடபவானிசாகர் அணை இந்த ஆண்டி‌ல் முதன்முறையாக 100 அடியை தொட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பவானிசாகர் அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 120 அடியாகும். இதில் சகதிகள் இரு‌க்கு‌ம் 15 அடியை கழித்து மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும். கடந்த ஆண்டில் ஜூலை மாதம் முதல் தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியதால் கடந்த டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து ஒவ்வொறு மாதமும் உபரி தண்ணீர் பவானி ஆற்றின் மூலம் திறந்துவிட்டு காவிரியில் கலந்தது.

கடந்த டிசம்பர் மாதம் பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதேசமயம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கீழ்நோக்கி சென்றது. கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 92 அடியாக இருந்தது. அதற்குபிறகு பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று காலை இந்த வருடத்தில் முதன்முறையாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டது.

அணைக்கு வினாடிக்கு 3969 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 650 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்னும் இரண்டடி உயர்ந்நதால் அணையில் இருந்து மேல்மதகுகள் வழியாக உபரி தண்ணீர் திறந்துவிடப்படும். காரணம் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் திடீரென மழை பெய்து தண்ணீர் வந்தால் அணையின் பாதுகாப்பு கருதி 102 அடிக்கு மேல் தண்ணீர் நிறுத்தக்கூடாது என்பது பொதுப்பணித்துறை விதியாகும்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கே.பழனிச்சாமி, உதவிசெயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், அணை பிரிவு இளம்பெறியாளர் எஸ்.விவேகானந்தன் ஆகியோர் அணையின் நீர்வரத்தை கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil