Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் அணை நீர் வரத்து உயர்வு!

மேட்டூர் அணை நீர் வரத்து உயர்வு!
, திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (11:22 IST)
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண சாகர் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 58.170 அடியாக இருந்தது. இதன் அதிக பட்ச நீர் மட்டம் 120 அடி.

அணைக்கு விநாடிக்கு 24,087 கன அடி தண்ணீர் வந்து கொண்டிரு‌க்‌கிறது. காவிரி பாசன பகுதிகளுக்காக அணையில் இருந்து விநாடிக்கு 12,664 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

காவிரி ஆற்றில் விநாடிக்கு 5,666 கன அடி, வென்னாற்றில் 102 கன அடி, கல்லணை கால்வாயில் 2,306 கன அடி, கொள்ளிடம் கால்வாயில் 740 கன அடி வீதம் பிரித்து அனுப்பப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil