Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் நீர்மட்டம் 40 அடி குறைந்தது!

மேட்டூர் நீர்மட்டம் 40 அடி குறைந்தது!
, செவ்வாய், 22 ஜூலை 2008 (11:01 IST)
கா‌வி‌ரி டெ‌ல்டா பாசன‌த்‌தி‌ற்கு மே‌ட்டூ‌ர் அணை‌‌யி‌ல் இரு‌ந்து த‌ண்‌ணீ‌‌ர் ‌‌திற‌ந்து ‌விட‌ப்ப‌ட்டு வரு‌கிறது. கட‌ந்த 40 நா‌ட்க‌ளி‌ல் அணை‌யி‌ல் ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் 40 அடியாக குறை‌ந்து‌ள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 64.53 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,147 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 13,017 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்இருப்பு 28.17 டி.எம்.சி. ஆக இருந்தது. அணை திறக்கப்பட்ட ஜூன் 12ம் தேதி நீர்மட்டம் 103.31 அடியாக இருந்தது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாமல், நீர்வரத்து தொடர்ந்து குறைந்ததாலும், தினமும் அணையிலிருந்து 1டி.எம்.சி. வீதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது.

கடந்த 40 நாட்களில் அணையின் நீர்மட்டம் 40 அடி குறைந்துள்ளது.

இ‌ன்று காலை 8 ம‌ணி ‌நிலவர‌ப்படி அணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் 63.67 அடியாக உ‌ள்ளது. அணை‌க்கு 1,594 கனஅடி த‌ண்‌ணீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அணை‌யி‌ல் இரு‌ந்து ‌வினாடி‌க்கு 12,982 கனஅடி ‌நீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.

க‌ல்லணை‌யி‌ல் இரு‌ந்த விநாடிக்கு 6,554 கன அடியும், வெண்ணாற்றில் இரு‌ந்து 2,513 கன அடியும், கல்லணைக் கால்வாயில் இரு‌ந்து 1,234 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil