Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு அரசு தடை!

Advertiesment
மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு அரசு தடை!
, வியாழன், 3 ஜூலை 2008 (15:54 IST)
மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு அக்டோபர் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

கோழிப் பண்ணைகள். ஸ்டார்ச் தயாரிப்பு தொழிற்சாலைகளின் தேவை அதிகரித்து வருகிறது. அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் மக்காச்சோளம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கோழி உட்பட கால்நடைகளின் தீவனத்தின் விலை உயர்கிறது.

இதன் விலையை கட்டுப்படுத்த மக்காச்சோளத்தின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோழி பண்ணை உரிமையாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்டு உள்நாட்டில் தாராளமாக கிடைக்கவும், விலை உயர்வை தடுக்கவும், மத்திய அரசு மக்காச் சோளம் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

உள்நாட்டில் மக்காச்சோளத்தின் விலை, மொத்த விற்பனை நிலையங்களிலேயே குவிண்டாலுக்கு ரூ.900 ஆக அதிகரித்துவிட்டது. கால்நடை தீவனம் தயாரிக்கவும், ஸ்டார்ச் தொழிற்சாலைகளுக்காகவும் மாதத்திற்கு 1 லட்சம் டன் மக்காச் சோளம் தேவைப்படுகிறது.

அமெரிக்கா உட்பட முன்னேறிய நாடுகள் மக்காச் சோளத்தை மாற்று எரிபொருளான எத்தனால் தயாரிக்க பயன்படுத்த துவங்கிவிட்டன. இதனால் உலக சந்தையில் மக்காச்சோளத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் விலையும் அதிகரித்துள்ளது.

மக்காச்சோளத்தை அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடான அமெரிக்காவிலேயே மக்காச்சோளத்தின் விலை டன் 400 டாலராக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil