மேட்டூர் அணையில் இருந்து காவேரி பாசன பகுதிகளுக்காக தண்ணீர் திறந்து விடுவது நேற்று மதியம் முதல் விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன் விநாடிக்கு 11,983 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
காவிரி பாசன பகுதியில் நெல் பயரிடுள்ள விவசாயிகளின் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவு திறந்துவிடப்படுகிறது.
மேட்டூர் அணையில் 87.67 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் மொத்த உயரம் 120 அடி.
அணைக்கு விநாடிக்கு 586 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி திறந்துவிடப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி, வென்னாறுக்கு விநாடிக்கு தலா 3,472 கன அடி வீதமும், கல்லணை கால்வாயில் 1,804 கன அடி, கொள்ளிடம் கால்வாயில் 1,076 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.