Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாய கடன் தள்ளுபடி- அதிகாரி நியமனம்!

விவசாய கடன் தள்ளுபடி- அதிகாரி நியமனம்!
, செவ்வாய், 3 ஜூன் 2008 (18:27 IST)
நபார்ட் வங்கியின் செயல் இயக்குனர் எஸ்.கே.மித்ராவை விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி விவகாரத்தை கவனிக்கும் ஒருங்கினைப்பு அதிகாரியாக (நோடல் ஆஃபிசர்) மத்திய அரசு நியமித்துள்ளது.

விவசாயிகள் வாங்கிய கடன் ரூ.71 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகள் எந்தெந்த வங்கிகளில் கடன் வாங்கி உள்ளனர், அவர்களின் கடன் தொகை எவ்வளவு, அவருக்கு இருக்கும் நிலத்தின் அளவு, விவசாய கடனா அல்லது டிராக்டர் போன்ற விவசாய கருவிகள் வாங்கிய கடனா போன்ற விபரங்களின் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

இதனை ஒருங்கினைக்கும் அதிகாரியாக நபார்ட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.கே. மித்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கடன் தள்ளுபடியை அமல்படுத்த, அவரின் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை நியமிக்கப்படும். இவர் தினசரி கடன் தள்ளுபடி திட்டம் எந்த அளவுக்கு அமல்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிப்பார். இதன் விபரங்களை மத்திய அரசுக்கு தெரிவிப்பார்.

விவசாயிகள், கூட்டுறவு வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் திட்டத்தை அமல்படுத்தும் வங்கியாக ஏற்கனவே நபார்ட் வங்கி நியமிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பட்ஜெட் தாக்கலின் போது ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. சமீபத்தில் மேலும் ரூ.11,000 கோடி தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. மொத்தம் ரூ.71 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil