தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகைக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழல் உள்ளது என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழைராஜ் கூறியுள்ளார்.
இதனால் தற்போது பெய்து வரும் மழை தீவிரமடைந்து திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.
இந்த மழை மே மாதம் 27ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
கடந்த 14ஆம் தேதி கணிப்பின்படி மே மாதம் 16 முதல் 22ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று மழைராஜ் கூறியதுபோல் தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.