தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட ஐந்து நாட்களுக்கு முன்னரே தொடங்கியுள்ளது!
இந்தியாவில் மழை நீரை மட்டுமே நம்பி, அதிக அளவு விவசாயிகள் விவசாயம் செய்கினறனர். தென் மேற்கு பருவமழை கோடிக்கான விவசாயிகளின் உயிர் மூச்சாக உள்ளது.
இந்த பருவ மழை பொய்த்துவிட்டால், உணவு உற்பத்தி குறைவதுடன், விவசாயிகளின் வாழ்க்கையும் நெருக்கடிக்கு உள்ளாகும்.
இந்தியாவில் சுமார் 24 கோடி விவசாயிகள் தென் மேற்கு பருவமழையை நம்பியே விவசாயம் செய்கின்றனர். இந்த மழை பொழிவின் அளவை பொறுத்தே எந்தப் பயிரை விதைப்பது என்று முடிவெடுப்பார்கள். ரபி (குறுவை) பருவத்தில் பயிர் செய்வதற்கு, தென்மேற்கு பருவ மழையை நம்பியே உள்ளனர்.
இந்த வருடம் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட, ஐந்து நாட்கள் முன்னரே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் அந்தமான் கடல் பகுதியிலும், வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு பகுதியில் மேகமூட்ட்ம தொடங்கியுள்ளது. இந்த பகுதியில் மே 17 முதல் 20 ந் தேதிகளில் தான் மழை மேகம் உருவாகும். இந்த வருடம் ஐந்து நாட்கள் முன்னதாகேவ, மழை மேகம் உருவாகத் தொடங்கியுள்ளது. அந்தாமான் தீவுப் பகுதிகளில் மே 12 ந் தேதி கனத்த மழை பெய்தது. இதனால் அந்தமான் விமான நிலையத்தின் ஓடு பாதையில் தண்ணீர் புகுந்தது. விமானங்கள் தரை இறங்கமுடியாமல் திருப்பி விடப்பட்டன.
தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் வழக்கமாக ஜூன் 1 ந் தேதி தொடங்கும். இநத வருடம் மே 25 ந் தேதியே தொடங்கும் என்று எதிர்பார்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் அடுத்த சில நாட்களுக்கு மேகமூட்டம் காணப்படுவதுடன், ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வாணிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.