Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஃபி தோட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி!

காஃபி தோட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி!
, சனி, 22 மார்ச் 2008 (20:09 IST)
ஃபி தோட்டங்களில் உள்ள செடிகள் நட்டு பல வருடங்கள் ஆகின்றன. இதனால் இவற்றின் விளைச்சல் குறைந்து, காபி விவசாயிகள் வருவாய் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்

இவர்களுக்கு உதவி செய்ய 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ.310 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூருவில் இன்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரிவில் அமைந்துள்ள கஃபி வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ஜெய்ராம் ரமேஷ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அமைச்சரவை கஃபி விவசாயிகளுக்கு ரூ.310 கோடி நிதி உதவி திட்டத்திற்கு மார்ச் 13ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் படி பராம்பரியாமாக காபி விளையும் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் வயது முதிர்ந்த கஃபி செடிகளை அகற்றிவிட்டு புதிய செடிகள் நட ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறு கஃபி விவசாயிகளின் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்வதற்காக ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர் பாசன வசதி ஏற்படுத்த 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது வரை கஃபி பயிரிடாத வட கிழக்கு மாநிலக்களில், புதிதாக கஃபி தோட்டம் அமைக்க ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டடுள்ளது. விவசாயிகளின் நிதி ஆதாரங்களை மேம்படுத்தவும், சுய உதவி குழுக்கள். குறு விவசாயிகளின் நலனுக்காகவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்த கஃபி செடிகளுக்கு பதிலாக, புதிய செடிகளை நட உதவி செய்ய வேண்டும் என்று பல காலமாக கூறப்பட்டுவந்தது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காபி வாரியம் 3 முதல் 4 வருடங்களில் பலன் அளிக்க கூடிய சந்திரகிரி ரக கஃபி செடிகளை விநியோகிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு இது வரை கஃபி பயிரிடாத பகுதிகளிலும் காபி பயிடுவதை தொடங்குகவதில் கவனம் செலுத்துகிறது. இதன் படி ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் படேரு, அராகு பகுதிகளி்ல் கவனம் செலுத்துகிறது.

இதில் படேரு பகுதியில் வாழும் பழங்குடியினர் செயற்கை உரம் பயன்படுத்தாமல் கஃபி பயிரிடுகின்றனர். அவர்களுக்கு அரசு முழு அளவு உதவி செய்யும்.

ஃபி தோட்ட விவசாயிகளைப் போலவே, ஏலக்காய் தோட்ட விவசாயிகள் புதிய செடியை நடுவதற்கு ரூ.42 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil