பஞ்சாப் மாநிலத்தில் கரிப் பருவத்தில் 1 கோடியே 23 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் இந்திய உணவு கழகம், மாநில அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் 1 கோடியே 10 லட்சம் டன் ( 82 விழுக்காடு ) நெல் கொள்முதல் செய்துள்ளன. தனியார் துறையினர் 22 லட்சத்து 33 ஆயிரம் டன் ( 18 விழுக்காடு ) கொள்முதல் செய்துள்ளன.
இதில் லூதியான மாவட்டத்தில் அதிகபட்சமாக 16 லட்சத்து 41 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் சென்ற கரிப் பருவத்தில் 15 லட்சத்து 80 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
இரண்டாவதாக சன்குருர் மாவசட்டத்தில் 15 லட்சத்து 53 ஆயிரம் டன்னும், மூன்றாவதாக பாடியாலா மாவட்டத்தில் 12 லட்சத்து 88 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 10 ந் தேதி நிலவரப்படி மாநில அரசு நிறுவனங்களான பஞ்சாப் கிரைன் 26 லட்சத்து 1 ஆயிரம் டன், மார்க்பீட் 23 லட்சத்து 88 ஆயிரம் டன், பஞ்சாப் சப்ளை என்ற நிறுவனம் 25 லட்சத்து 72 ஆயிரம் டன், பஞ்சாப் ஸ்டேட் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் 13 லட்சத்து 39 ஆயிரம் டன், பி.எ.ஐ.சி 11 லட்சத்து 7 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளன.
மத்திய அரசின் இந்திய உணவு கழகம் 1,30,781 டன் கொள்முதல் செய்துள்ளது.
இந்த வருடம் பஞ்சாப் மாநில அரசு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்த 72 மணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று அறிவித்தது. இதன் படி மாநில அரசின் அமைப்புக்கள் நவம்பர 8 ந் தேதி வரை விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்ததற்காக ரூ. 7,209 கோடி வழங்கியுள்ளன.
இது குறித்து மாநில அரசின் உயர் அதிகாரி கூறுகையில், விவசாயிகளுக்கு கால தாமதம் இல்லாமல் பணம் வழங்குவதற்காக மாநில அரசு ரூ. 7779 கோடியே 85 லட்சம் ஒதுக்கியிருந்ததாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் இந்த வருடம் விவசாயிகளுக்கு கால தாமதம் இல்லாமல் பணம் வழங்குவதற்காக மாநில அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. 9058 கோடியே 50 லட்சம் கடனுக்கான முன் அனுமதியை பெற்றது.
இத்துடன் இந்த மாதமும் அதிகளவு கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதால், மாநில அரசு ரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக ரூ. 950 கோடி அனுமதிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது.
மாநில அரசின் அமைப்புகளிடம் நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் சிரமப் பட கூடாது என்ற காரணத்தினால் 1,544 நெல் முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன என்று தெரிவித்தார்.